தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேட்டையில் படைப் பரிவாரங்களுடன் பரப்புரை: இது உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர்! - AIADMK candidate from Uthiramerur constituency

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், பேட்டை பகுதியில் இன்று (மார்ச் 20) பரப்புரையில் ஈடுபட்டார்.

உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பரப்புரை
உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பரப்புரை

By

Published : Mar 20, 2021, 3:18 PM IST

தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக, பாமக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பரப்புரை

உத்தரமேரூர் தொகுதி (பேட்டை பகுதிகள்)

அதனடிப்படையில் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட முத்தியால்பேட்டை, ஐயம்பேட்டை, கருக்குப்பேட்டை, கிதிரி பேட்டை, ஏகனாம்பேட்டை, திம்மராஜாம்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பேட்டை பகுதிகள், அதனைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று (மார்ச் 20) பரப்புரையில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு அரசின் சாதனைகளைப் பற்றியும், தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அதிமுக அரசு அறிவித்த தேர்தல் அறிக்கையின்படி 100 விழுக்காடு அனைவருக்கும் பொருள்கள் வழங்கப்படும் எனப் பொதுமக்களிடம் பேசி தன்னை வெற்றிபெறச் செய்ய, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனப் பரப்புரை செய்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்

இதில், அதிமுக கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட மாணவரணிச் செயலாளர் திலக்குமார், அதிமுக நிர்வாகிகள் கே.யூ.எஸ். சோமுந்தரம், வள்ளிநாயகம், அக்ரி நாகராஜன், பாமக, பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'இன்று அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!'

ABOUT THE AUTHOR

...view details