தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கையூட்டு பெற்ற இரு அரசு அலுவலர்கள் கைது!

காஞ்சிபுரம்: மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், நில மதிப்பீடு நிர்ணயம் செய்ய ரூ.50 ஆயிரம் கையூட்டு பெற்ற பதிவாளரின் உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

two-government-officials-arrested-for-bribery
two-government-officials-arrested-for-bribery

By

Published : Dec 23, 2020, 9:20 PM IST

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அண்ணா குடியிருப்பு பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் வீட்டு மனைப்பிரிவு நிலத்திற்கு, பத்திரப்பதிவு செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை அணுகிவுள்ளார்.

மனை பிரிவிற்கு அரசு நில கையேடு மதிப்பீடு நிர்ணயம் செய்து வழங்குவதற்காக மாவட்ட பதிவாளரின் உதவியாளர் சத்தீஷ்குமார், அலுவலக உதவியாளர் பாலாஜி ஆகியோர் ரூ.50 ஆயிரம் கையூட்டு கேட்டுள்ளனர்.

இது குறித்து திருநாவுக்கரசு லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையில் புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சதீஷ்குமார், பாலாஜியிடம் வழங்கும் படி கூறியுள்ளனர். திருநாவுக்கரசும் அவர்கள் சொன்னது போல் செய்துள்ளார்.

அப்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் மறைந்திருந்த காவல்துறையினர், கையூட்டு பெற்ற அரசு ஊழியர்கள் சதீஷ்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரசு ஊழியர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:டெல்லி, இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details