தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு - சாலைபோக்குவரத்து

செங்கல்பட்டு பிரதான சாலையில் இருந்த பழமை வாய்ந்த மரம் ஒன்று சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

road traffic

By

Published : Jul 26, 2019, 11:32 PM IST

திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையில் பழமை வாய்ந்த மரம் ஒன்று இருந்தது.

இந்த மரம் திடீரென சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து துப்புரவு தொழிலாளர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மரம் சாய்ந்ததில் சாலைபோக்குவரத்து பாதிப்பு

இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மழைக்காலங்களில் இது போன்ற மரத்தின் அருகே யாரும் நிற்க வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details