தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல் - காஞ்சிபுரம் அண்மைச் செய்திகள்

மருத்துவ முகாமில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஆக.13) மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

By

Published : Aug 13, 2021, 4:37 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாதம் இரு முறை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று (ஆக.13) காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய புதிய கட்டடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், காலை 7 மணி முதலே சிகிச்சைக்கு வரத்தொடங்கினர். மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சையளிக்க, ஒரு மருத்துவர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மாற்றுத்திறனாளி

30 நிமிடம் நீடித்த போக்குவரத்து நெரிசல்

மேலும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்க தேவையான சக்கர நாற்காலி, தாழ்வான படிக்கட்டுகள், குடிதண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

இதனையடுத்து அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், முகாமில் கூடுதல் மருத்துவர்களை நியமித்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், ரயில்வே சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ரயில்வே சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:மாற்றுத் திறனாளிகளை குறிவைத்து 2.5 கோடி மோசடி!

ABOUT THE AUTHOR

...view details