தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக அளவிலான 'கிக் பாக்ஸிங்' போட்டிக்கு தமிழக சிறுமி தேர்வு! - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: தனியார் தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பயின்று வரும் சிறுமி இந்திய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கிக் பாக்சிங்

By

Published : Apr 6, 2019, 9:45 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் அருகே 'ஒன் மேன்' என்ற தனியார் தற்காப்பு கலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்-பெண் என இருபாலருக்கும் கராத்தே, கிக் பாக்ஸிங் போன்ற தற்காப்பு கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த மையத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ள மாணவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் இப்பயிற்சி மையத்திலிருந்து ஒரு சிறுமி உட்பட 3 பேர் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இதில் ஹர்ஷினி என்ற சிறுமி இந்திய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். இவர் வரும் ஜூன் மாதம் நேப்பாளத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்ற தேர்வாகியுள்ளார்.

இது குறித்து பயிற்சியாளர் ஹரிஷ் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் தற்காப்பு கலைகளை ஊக்குவித்து, இது போன்ற போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கும், பயிற்சி பெறுபவர்களுவர்களும், உதவிகள் செய்தால் பல்வேறு சாதனைகளை புரிய ஊக்கம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

தற்பொழுது, பெண்களுக்கு எதிராக குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பெண் குழந்தைகளை ஊக்குவித்து இது போன்ற தற்காப்பு மையத்தில் அவர்களது பெற்றோர்கள் சேர்த்தால் குழந்தைகள் தங்களை தற்காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் கூறினார்.

அதுமட்டுமல்லாது, அவர்களின் திறமைகளை போட்டிகளில் மூலம் வெளி கொண்டு வருவதற்கு அது வழிவகை செய்யும் என்றும் பயிற்சியாளர் ஹரிஷ் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details