சுங்குவார்சத்திரம் அருகே வாலாஜாபாத் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பொருட்களை வட மாநிலத்திற்குப் ஏற்றிச் செல்ல லாரி ஒன்று வந்துள்ளது. தொழிற்சாலை அருகே நின்றிருந்த லாரியில் இருந்து ஒரு விதமான வாடை வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், லாரி குறித்து சுங்குவார்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
வடமாநிலத்திற்கு கடத்த முயன்ற 82 கிலோ கஞ்சா பறிமுதல்; ஹரியானா இளைஞர்கள் கைது! - 82 கிலோ கஞ்சா பறிமுதல்
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வடமாநிலங்களுக்கு பொருட்கள் ஏற்றி செல்லும் லாரியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 82 கிலோ கஞ்சாவினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவலர்கள், லாரியை சோதனை செய்தனர். லாரியின் ஓட்டுநர் இருக்கையின் பின்புறமுள்ள ரகசிய அறையில் 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. ரூ.40 லட்சம் மதிப்புள்ள 82 கிலோ கஞ்சாவினை, ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து வட மாநிலத்திற்குக் கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பவன் குமார், ஓம்வீர் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.