செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பொதுமக்களுக்கு, இலவச சேலை வழங்கிய விவகாரத்தில், ஆலந்துார் தி.மு.க. - எம்.எல்.ஏ.வான தா.மோ.அன்பரசன் மீது, தேர்தல் விதி மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
'மொத்தமாக சேலை கொள்முதல் செய்தால், கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்'- காஞ்சிபுரம் கலெக்டர் - செங்கல்பட்டு
காஞ்சிபுரம்: 'மொத்தமாக சேலை கொள்முதல் செய்தால், கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்' என ஜவுளி வியாபாரிகளுக்கு கலெக்டர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
கலெக்டர் பொன்னையா
இந்நிலையில், அரசியல் கட்சியினர் சேலை வழங்கி, ஓட்டு கேட்க வாய்ப்பு உள்ளதால், காஞ்சிபுரம் பட்டு சேலை வியாபாரிகளை, அழைத்து, மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பொன்னையா, ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில் பங்கேற்ற ஜவுளி வியாபாரிகளிடம் கலெக்டர், பொன்னையா கூறியதாவது,சேலைகளை மொத்தமாக யாராவது கொள்முதல் செய்தால், அவர்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.