தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பையில் கிடந்த மர்மபொருள் வெடித்து நாய் தலை சிதறியதால் மக்கள் அச்சம்! - blast in garbage

காஞ்சிபுரம் : புத்தேரி கிராமக் குப்பை மேட்டில் கிடந்த மர்ம பொருள் வெடித்து நாய் தலை சிதறியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களால் அப்பகுதி சோதனை செய்யப்பட்டது.

காஞ்சிபுரம்

By

Published : Apr 9, 2019, 11:50 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் அரக்கோணம் அருகே புத்தேரி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பூமணி. கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இவருக்கு இருந்துவருகிறது. இந்த சூழலில் இவரின் பசுமாடு ஒன்று திருடப்பட்டுள்ளது. இதனையடுத்து பசுமாடு திருடுபோனது குறித்து காவல்நிலையத்தில் அவர் புகாரளித்தார்.

அதன்பிறகு மாலை வீடு திரும்பிய அவர் மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை தனது வீட்டுக்கு பின்புறம் இருக்கும் குப்பை மேட்டுப் பகுதியில் கட்டிவிட்டு வந்திருக்கிறார். அப்போது, திடீரென பயங்கரச் சத்தம் கேட்டுள்ளது.

தொடர்ந்து குப்பை மேடு சென்று பூமணி பார்த்தபோது குப்பையில் கிடந்த மர்மபொருள் ஒன்று வெடித்ததில் நாயின் தலை சிதறிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கொடுத்த அறிவுறுத்தல்படி, ஐந்து பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழு சம்பவ இடத்தில் இரண்டு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், போதிய வெளிச்சமில்லாததால் சோதனை பின்னர் தொடரும் என வெடிகுண்டு நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடுகுண்டு நிபுணர்கள் சோதனை.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,” காட்டுப் பன்றிகளை பிடிக்க சில வேதிப்பொருட்கள் பயன்படுத்துவார்கள். அதை விலங்குகள் கடிக்கும்பொழுது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் நாளை முழு சோதனைக்கு பிறகே உண்மை நிலை தெரிய வரும்” என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details