சென்னை பல்லாவரத்தை அடுத்து திருநீர்மலை உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருநீர்மலை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, திருத்தோரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருநீர்மலை தேர்த் திருவிழா
சென்னை: திருநீர்மலை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
therottam
இந்தத் தேர் உற்சவத்தில் பெருமாள் ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவியுடன் தேரில் அருள்பாலித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஊர்மக்கள் திருத்தேரை வரவேற்று கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். ஊர்முழுவதும் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.