தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கு தளர்வினால் திறக்கப்படும் திரையரங்குகள் - பராமரிப்புப் பணிகள் தீவிரம்

By

Published : Aug 22, 2021, 9:50 PM IST

அரசின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் தளர்வைத் தொடர்ந்து, நாளை (ஆகஸ்ட் 23) முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் திரையரங்குகளைத் திறப்பதற்கு ஆயத்தமான பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திரையரங்குகள் திறப்பு
திரையரங்குகள் திறப்பு

காஞ்சிபுரம்:தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட கரோனா ஊரடங்குத் தளர்வுகளில், ஆகஸ்ட் 23 முதல் திரையரங்குகள் திறக்கலாம் என அனுமதி வழங்கியிருந்தது.

அதில், ஒரு இருக்கைவிட்டு மற்றொரு இருக்கையில் என 50 விழுக்காடு பார்வையாளர்களை அமரவைத்து திரையரங்குகளை இயக்கலாம் என்றும், கிருமி நாசினி தினமும் தெளிக்க வேண்டும், குளிர்சாதனம் பயன்படுத்தக் கூடாது, கூடுதல் காட்சி இயக்கம், எண்ணிக்கைக்கு அதிகமானவா்களை அனுமதித்தல் கூடாது எனப் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் காஞ்சிபுரத்திலுள்ள பாபு, கார்த்திகேயன், நாராயணமூர்த்தி, அருணா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்பட்டு திரைப்படம் திரையிடப்படவுள்ளதால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், கிருமி நாசினிகளை தெளித்து திரையரங்குகள் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணியிலும் திரையரங்கு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முடங்கிக்கிடந்த திரையரங்குகள்

கரோனா பொது முடக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள பல்வேறு தளர்வுகளால் டாஸ்மாக் கடை திறப்பு, பேருந்து இயக்கம், கோயில்கள் திறப்பு, சந்தை, வணிக நிறுவனங்கள் போன்றவை முழுமையாகச் செயல்படுகின்றன.

இச்சூழலில் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வந்தனர்.

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பாபு திரையரங்கு ஊழியர்கள்

மேலும், திரையரங்கு திறக்காததால் புதிய திரைப்படம் தயாரிப்புப் பணி, ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்த படங்களுக்கான இறுதிகட்டப் பணிகள் போன்றவை முடங்கின. இதுதவிர திரையரங்குகளை நம்பி உள்ள தொழிலாளர்கள், போஸ்டர் உற்பத்தியாளர்கள், போஸ்டர் ஒட்டுவோர், உணவகம், வாகன நிறுத்தம் நடத்துவோர் என பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் அரசுக்கு முன்னதாக கோரிக்கை வைத்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details