காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தை ரூ.14 கோடியே 66 லட்சத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், இன்று நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
'அப்படி...இப்படி...எப்படி...அப்படி' - கட்டடப்பணிகளை திடீரென ஆய்வு செய்த எம்.எல்.ஏ!
காஞ்சிபுரம்: மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.14.66 கோடி மதிப்பில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் ஆய்வு செய்தார்.
திடீரென ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினர்
இதைத் தொடர்ந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும், நீச்சல் குளப்பணிகளையும் பார்வையிட்டார். அப்போது கட்டடப் பணிகளை தரமாகக் கட்டி, விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு வழங்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பாஜக எம்எல்ஏவின் நேர்மையை மனதாரப் பாராட்டிய ராகுல்...!