தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஊரக தொழிற்துறை அமைச்சரும், ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் நேற்று (மே.08) காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
’10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்க் நிறுவப்படும்’ - அமைச்சர் தா.மோ.அன்பரசன் - தா.மோ.அன்பரசன் செய்திகள்
சென்னை: ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ள ஓரிரு நாளில் 10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்க் நிறுவப்படவுள்ளது என ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
அதன்பின் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று தா.மோ. அன்பரசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் டேங் நிலை உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யப்படும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் , மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 10ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்க் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என உறுதியளித்தார்.