தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் பணியாளர் உயிரிழப்பு - டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - கரோனா

காஞ்சிபுரம்: கரோனா தொற்றால் மதுபானக் கடை விற்பனையாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி மதுபானக் கடைகளை அடைத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

By

Published : Jul 21, 2020, 6:12 PM IST

செங்கல்பட்டிலுள்ள ராட்டினம் கிணறு பகுதியில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்துவந்தவர் ராஜா. இவர் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் இவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, ராஜா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால்தான், தொடர்ச்சியாக கரோனா தொற்று ஏற்படுவதாகவும், உயிரிழந்த ராஜாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மண்டல அலுவலகம் முன் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனாவால் பணியாளர் உயிரிழப்பு - டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இதனால் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அனைத்தும் 2 மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டன.

இதையும் படிங்க: ஆயுதப்படைக் காவலர்களுக்கு மன அழுத்தம் தீர ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details