தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கே.எஸ் அழகிரி மீது காவல் நிலையத்தில் புகார் - rss complaint

காஞ்சிபுரம்: ஆர்எஸ்எஸ் அமைப்பை அவதூறாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி மீது  காவல் நிலையத்தில் புகார்

By

Published : May 19, 2019, 12:07 AM IST

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பரப்புரையின்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் வேட்பாளரை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரையின்போது நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசி இருந்தார். இது பல்வேறு சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செய்தியாளர் சந்திப்பின்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பற்றி ஒரு சில கருத்துக்களை கூறி இருந்தார். அவர் கூறிய கருத்துக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை இழிவுபடுத்துவதாகக் கூறி, அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் மாவட்ட தலைவர் கோதண்டன் தலைமையில் காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி மீது காவல் நிலையத்தில் புகார்

ABOUT THE AUTHOR

...view details