காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிதாக 2வது விமான நிலையம் அமைக்கப்படும் என அண்மையில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. அவ்வாறு புதிய விமான நிலையத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 12க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள பல ஆயிரம் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.
தரிசு நிலங்களில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் - ஏகனாபுரம் கிராம மக்கள் மனு மேலும் விமான நிலையம் அமைய உள்ளதாக இறுதி செய்யப்படாமல் வெளியான வரைபடத்தில் பரந்தூரை அடுத்துள்ள ஏகனாபுரம் கிராம குடியிருப்பு பகுதியும் இருப்பதால் தங்கள் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்து தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் இது குறித்து ஏகனாபுரம் கிராம மக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பரந்தூர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தன, 12 கிராமங்களை சேர்ந்த பகுதிகள் உள்ளடக்கியதாக வரைபடம் வெளியானது. அதில் 11 கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை தவிர்த்து மற்ற பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளன. ஆனால் ஏகனாபுரம் கிராமத்திலுள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் விமானம் அமைய உள்ளதாக தெரிய வருகிறது.
தரிசு நிலங்களில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் - ஏகனாபுரம் கிராம மக்கள் மனு இதன் காரணமாக நாங்கள் தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களை சந்தித்து எங்கள் பகுதியில் சுமார் 600 குடும்பத்தைச் சேர்ந்த 2500 பேர் வசித்து வருகிறார்கள் என்றும், காலம் காலமாக நாங்கள் வசித்து வரும் நிலையில் எங்கள் குடியிருப்பு பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என கூறினோம். அதற்கு உங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி பரிசீலனை செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனை அடுத்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் மனு அளித்துள்ளோம், மாவட்ட ஆட்சியரும் தற்பொழுது வெளியாகி உள்ளது பழைய வரைபடம். தமிழக அரசு இன்னும் புதிய விமான நிலையம் அமைய உள்ள பகுதிகள் இன்னும் முழுமையாக இறுதி வரையறை செய்தப் பின்னரே அரசு சார்பில் நாங்கள் உங்கள் பகுதிக்கு வந்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி உங்களை சந்திப்போம். அப்போது உங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் விமான நிலையம் அமைக்க ஆவண செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'விவசாயத்தை அழித்து விமானநிலையம் அமைப்பதா? பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்கமாட்டோம்'