செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பேருந்து நிலயத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும், என்ஆர்சி, என்பிஆர் ஆகிய பட்டியல்களைத் தயாரிப்பதை நிறுத்தக்கோரியும், மத்திய அரசை வலியுறுத்தி திமுக கூட்டணியின் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆளும் அதிமுக, அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 11 பேர் கையெழுத்திட்டதன் விளைவாக இன்று இத்திட்டம் அமலுக்கு வைத்துள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமியருக்கும், இலங்கை தமிழருக்கும் அதிமுக துரோகம் இழைத்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.