கரோனா வைரஸ் தொற்றுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குன்றத்தூர், மாங்காடு, சிக்கராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நோய் பரவுவதைத் தடுக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கென்று இரண்டு சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா கட்டுப்பட்டுப் பகுதிகளில் சிறப்பு அதிகாரிகள் ஆய்வு - கரோனா கட்டுப்பட்டுப் பகுதி
காஞ்சிபுரம்: மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பு அதிகாரிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில், நியமிக்கப்பட்ட இரு அலுவலர்களான முனைவர் இல. சுப்பிரமணியன், பவானீஸ்வரி ஆகியோர் மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் கரோனா பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அப்பகுதியினரிடையே கேட்டறிந்தனர்.
மேலும், கண்டெய்ன்மெண்ட் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பொருட்கள் என்னவெல்லாம் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார்கள்.