தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு பசுவையும் கன்றையும் வழங்கிய சமூக ஆர்வலர்' - Kancheepuram

காஞ்சிபுரம்: முத்தியால்பேட்டையில் கண் பார்வையற்ற கிராமப்புற மாற்றுத் திறனாளிக்கு வாழ்வாதாரத்தை உயர்த்திட பசுவையும், கன்றையும் வழங்கிய சமூக ஆர்வலரை கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

By

Published : Apr 30, 2021, 3:21 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரசியல் கட்சி பிரமுகரும், சமூக ஆர்வலருமான முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் ஏழை எளியவர்களுக்கு அரசியல் கட்சிகள் பாகுபாடின்றி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவருகிறார்.

தற்போது உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கண் பார்வையற்ற கிராமப்புற மாற்றுத்திறனாளி ஒருவர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து சமூக ஆர்வலர் ஆர்.வி. ரஞ்சித்குமாரிடம் அனுகினார்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் நிலையைக் கேட்டு முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் உடனடியாக மாற்று திறனாளியின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் கன்றுடன் இருக்கக்கூடிய கறவைப் பசு மாடு ஒன்றை வாங்கி அதற்கு முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலில் கோ பூஜை செய்து வாழ்க்கையில் வளம்பெற வாழ்த்தி கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்களும், கிராம முக்கிய பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் கலந்துகொண்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளியின் வாழ்வாதாரத்திற்கு கறவை பசுமாடுகள் வழங்கிய சமூக ஆர்வலர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமாரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

ABOUT THE AUTHOR

...view details