தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - marry and shouted

காஞ்சிபுரம்: திருமணம் செய்ய மறுத்ததால் பயிற்சி செவிலியரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த பயிற்சி செவிலியர்

By

Published : Apr 27, 2019, 8:02 PM IST

Updated : Apr 27, 2019, 8:22 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. செவிலியர் படிப்பை முடித்துள்ள இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயந்திக்கும், அவரது உறவினரான வண்டலூர் பகுதியை சேர்ந்த முத்துவுக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நாளடைவில் திருமணப் பேச்சு தடைப்பட்டுள்ளது. இதையடுத்து முத்து, ஜெயந்தியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஜெயந்தி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த முத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இளம்பெண்ணுக்கு கத்திகுத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முத்துவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Apr 27, 2019, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details