தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மேட்டுத் தெருவிலுள்ள திருமண மண்டபம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த சீமான் பேசுகையில், “தேர்தல் ஆணையம் என்பது நாடக கம்பெனி, பறக்கும் படை அமைப்பார்கள் அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பார்கள்.
ஆகவே தேர்தல் ஆணையத்தையே சீர்திருத்த வேண்டும். தற்போது அரசியல் என்பது சாதி, மதம், சாராயம், கவர்ச்சி, பணம் ஆகிய ஐந்து தூண்களால் கட்டமைக்கப்படுகிறது.
சாதி, மதம், சாராயம் தாண்டினாலும் பணத்தைத் தாண்ட முடியவில்லை. ஒன்பது மாவட்டத் தேர்தலில் மூக்குத்தி, அண்டா, குண்டா, பட்டுச் சேலைகளை மொத்தமாக அள்ளிச் சென்று உள்ளார்கள். எம்பி, எம்எல்ஏக்கள் அதைவிட அதிக வருமானம் ஈட்டும் தொழிலாக உள்ளாட்சிப் பதவி உள்ளது.
ஒரேநாளில் தேர்தலை நடத்த முடியுமா?