தமிழ்நாடு

tamil nadu

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து காவலர் நலச்சங்கம் கண்ட கூட்டம்!

விழுப்புரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் இன்று கண்டன கூட்டம் நடைபெற்றது.

By

Published : Aug 13, 2019, 11:25 PM IST

Published : Aug 13, 2019, 11:25 PM IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து காவலர் நலச்சங்கம் கண்ட கூட்டம்!

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் விஐபிக்கள் வரிசையில் பாஸ் இல்லாமல் சிலரை உள்ளே செல்ல அனுமதித்ததாக காவல் துறை ஆய்வாளர் ரமேஷ் என்பவரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் கண்டித்துப் பேசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆட்சியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் இன்று விழுப்புரத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து காவலர் நலச்சங்கம் கண்ட கூட்டம்!

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆட்சியர் பொன்னையாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details