காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை வல்லம் அருகில் இன்று (ஜன.1) அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, சாலையின் நடுவே இருந்த மாடுகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இவ்விபத்தில் மூன்று கன்றுக்குட்டிகள் உள்பட எட்டு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் இரண்டு மாடுகள் பலத்த காயமடைந்தன. இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த ஒரகடம் காவல் துறையினர், சாலையின் நடுவே இறந்து கிடந்த மாடுகளையும், பலத்த காயமடைந்த மாடுகளையும் சாலையின் ஓரத்தில் எடுத்து போட்டுவிட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாடுகள் வீட்டில் கட்டப்படாததால் இரவு நேரங்களில் உடல்சூடுக்காக சாலையின் நடுவே படுத்துக்கொள்வதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது.
இதையும் படிங்க...கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாளை முதல் தொடக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர்