தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆதரவற்றோருக்கு உணவு, உடை; இறந்தால் நல்லடக்கம்' - நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஓய்வுபெற்ற எஸ்ஐ - ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் காவல் அலுவலர்

காஞ்சிபுரம்: ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊரடங்கு காலத்திலும் உணவு, உடை உள்ளிட்டவற்றை ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மனித நேயத்துடன் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம்  ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்  kanchipuram  kanchipuram police provide food to old people  ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் காவல் அலுவலர்  ஓய்வு பெற்ற காவலர் சீனிவாசன்
ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை வழங்கும் சீனிவாசன்

By

Published : Jun 28, 2020, 5:48 PM IST

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் சீனிவாசன். இவர் யாரும் உணவின்றியோ, உடையின்றியோ துன்பப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தனது சொந்தச் செலவில் நாள்தோறும் காஞ்சிபுரம் நகர்ப்புறப் பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடுத்த உடை அளித்து, உண்ண உணவும் அளித்துவருகிறார். மேலும், இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர் உடல்களை நல்லடக்கமும் செய்துள்ளார்.

ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை வழங்கும் சீனிவாசன்

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்தாலும் ஆதரவற்றவர்களுக்கு உணவினையும், உடையினையும் வழங்கிவருகிறார். மனிதநேயத்துடன் இவர் செய்யும் செயலை காஞ்சி நகர மக்கள் பாராட்டிவருகின்றனர். காலை வேளையில் இவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்து உணவு பெற்றுச் செல்லும் முதியவர்கள் இவரை வாயாற வாழ்த்திச் செல்கின்றனர்.

இதையும் படிங்க:கருகும் பூ விவசாயிகளின் வாழ்க்கை - அரசு கவனம் செலுத்துமா ?

ABOUT THE AUTHOR

...view details