தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்குவாரி விபத்தில் இருவர் உயிரிழப்பு: இடிபாடுகளை அகற்றும் பணி தொடக்கம் - Removal of ruins at Mathur quarry begins

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த மதூர் தனியார் கல்குவாரியில் மூன்றாவது நாளாக மூன்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

mathur quarry
mathur quarry

By

Published : Feb 6, 2021, 10:40 PM IST

காஞ்சிபுரம் அருகே மதூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதில் ஒரு லாரி உள்பட சில வாகனங்கள் சிக்கியிருப்பதால் இதில் வேறு சில நபர்கள் சிக்கியிருக்கலாம் என்றும் சரிந்திருக்கும் மண் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மூன்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளில் சிக்கிய வாகனங்கள் மீட்கப்பட்டன. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று (பிப்.6) கல்குவாரி இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இடிபாடுகளை முழுமையாக அகற்றிய பின்னரே மண் குவியலுக்குள் தொழிலாளர்கள் யாரேனும் சிக்கியுள்ளனரா? அல்லது வேறு ஏதேனும் வாகனங்கள் சிக்கியுள்ளதா என்பதை கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மனித உரிமை ஆணைய உத்தரவுகள் மாநில அரசைக் கட்டுப்படுத்தும் - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details