காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள தோட்ட நாவலில் செம்மரம் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர்.
லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்! - Red sanders seized in uthiramerur
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
செம்மர கட்டைகள்
அப்போது அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவர் வீட்டின் எதிரே ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை ஆய்வு செய்தபோது அதில் சுமார் 200 செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, லாரியை மீட்ட உத்திரமேரூர் காவல்துறையினர் ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் பல லட்சம் மதிப்புக்கு கொண்டது.