தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் மூலம் மாதம்தோறும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் எழுதபடிக்க தெரியாத ஏழை, எளிய மக்கள் நிறைந்து உள்ள காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டு தெரு பகுதியில் உள்ள நியாய விலைக் கடையிலிருந்து நாள்தோறும் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது.
படிக்காத ஏழை மக்கள் நிறைந்து உள்ள பகுதி என்பதால் அவர்களுக்கு வழங்கியது போல் கணக்கு காட்டிவிட்டு நியாய விலை கடை விற்பனையாளர், எடைபோடும் ஊழியர் இருவரும் சேர்ந்து அத்தியாவசியப் பொருள்களை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் ஆட்டோவில் பொருள்களை ஏற்றி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான நியாயவிலை கடைகளிலும் இதேநிலை நீடிப்பதால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:அறநிலையத் துறை சீல்வைத்த பள்ளியை மீண்டும் இயக்க அனுமதி அளித்த நீதிமன்றம்!