காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது ராஜகணபதி ஓட்டல். இங்கு வாடிக்கையாளர் ஒருவர் புரோட்டாவும், சாம்பர் சாதமும் வாங்கியிருக்கிறார். அவர் வாங்கிய அந்த சாம்பரில் எலி செத்த நாத்தம் அடித்ததாக கூறப்படுகிறது.
இதை உணவகத்தின் உரிமையாளரிடம் சென்று கேட்டதற்கு அவர் வாடிக்கையாளர் அவதூறாக பேசி கடையை விட்டு விரட்டியடித்துள்ளார். வாடிக்கையாளர் நியாயம் கேட்டபோது எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.