தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் மழைநீர் வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை - காஞ்சிபுரம் அண்மைச் செய்திகள்

மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் அமைத்து தர தாமல் காலனி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமல் காலனி பகுதி அம்பேத்கர் நகர் குடியிருப்பில் தேங்கி நிற்கும் மழைநீர்
தாமல் காலனி பகுதி அம்பேத்கர் நகர் குடியிருப்பில் தேங்கி நிற்கும் மழைநீர்

By

Published : Jul 10, 2021, 7:44 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் காலனி பகுதியில் அம்பேத்கர் நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 8 வழிச் சாலையாக மாற்றப்படுவதால், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மழைநீர் கால்வாய், சாலையாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் அவ்வப்போது பெய்யும் கோடை மழையால், தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. அம்பேத்கர் குடியிருப்பில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளில் சில தண்ணீர் தேக்கத்தால் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.

தண்ணீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு

தாமல் காலனி பகுதி அம்பேத்கர் நகர் குடியிருப்பில் தேங்கி நிற்கும் மழைநீர்

இங்கு பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிவறை பயன்படுத்துவதால், தண்ணீர் தேங்கும் சமயத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில், புதிய மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று: அடுத்த 4 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழை!

ABOUT THE AUTHOR

...view details