தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உரியடி' 'மாட்டுவண்டி சவாரி' பொங்கலில் கலக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், கிராம பொதுமக்களும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பொங்கல் விழா
பொங்கல் விழா

By

Published : Jan 15, 2020, 3:52 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வடகடும்பாடி கிராமத்தில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது . இந்த விழாவில் அதிமுக கட்சியின் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர்களுக்காக பிரத்தியேகமாக நடைபெற்ற நாட்டுப்புற பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடி, கயிறு இழுத்தல், மாட்டுவண்டி சவாரி , இசை நாற்காலி போன்றவற்றில் ஆர்வமுடன் பங்கேற்ற அவர்கள் கிராம மக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

பொங்கலில் கலக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு விவகாரம்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள்...!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details