ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவர்களின் படைப்பினை, நூலாக வெளியிடுவதற்கு ரூ.40 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் ஆண்டில் சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்ட "வானைத் தேடும் மேகங்கள்" என்னும் நூல் தேர்வு செய்யப்பட்டது. இதனை வள்ளியப்பன் என்பவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இன்று (டிச.28) காஞ்சிபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், "வானைத் தேடும் மேகங்கள்" என்னும் நூலை எழுதிய ஆதிதிராவிடர் நூலாசிரியர் வள்ளியப்பன் என்பவருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூபாய் 20 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி உடனிருந்தார்.
இதையும் படிங்க: தொட்டால் தீட்டு என்கிறார்கள்; நியாய விலைக் கடையில் அநியாயம்!