காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அருகே களியனூர் ஊராட்சி மன்றத்தலைவர் வடிவுக்கரசியின் கணவர் ஆறுமுகம்(48). இவர் அப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட பொறுப்பாளராகவும், ஊத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று (அக்.22) இரவு தனது மனைவி வடிவுக்கரசிக்கு உடல்நிலை சரியில்லாததால் காஞ்சிபுரத்திலுள்ள ஓர் தனியார் மருத்துவமனைக்கு சென்று திரும்பியபோது வீட்டின் அருகே, பின் தொடர்ந்து வந்த மாஸ்க் அணிந்த நபர்கள் ஆறுமுகத்தை திடீரென அரிவாளால் கை, தலை, தாடை உள்ளிட்டப்பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அப்போது ஆறுமுகத்தின் அலறல் சத்தத்தினை கேட்டு அக்கம்பக்கத்திலுள்ள இளைஞர்கள் வெளியில் வர, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் நிலைகுலைந்த நிலையில் இருந்த ஆறுமுகத்தை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் செய்வதறியாது அதிர்ச்சியடந்த அங்கிருந்தவர்கள், நிலைகுலைந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவரை, சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து, அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டார்.