காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பிரபல ரவுடியும் தொழில் அதிபருமான குன்றத்தூர் வைரம் (43) என்பவர் போட்டியிடுகிறார். அதையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியருமான முத்து மாதவனிடம் பிரபல ரவுடி வைரம் நேற்று (மார்ச் 17) வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, இவர் ஸ்ரீபெரும்புதூர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய பேரணியாக சென்றுள்ளார். இதனால் ஸ்ரீபெரும்புதூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.