காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் தொழில் நகரமாகவும், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகவும் விளங்குகின்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
அதிலும், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருகிறது.
அப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் மாதம்தோறும் தங்களுக்கு, அதிகப்படியான மாமூல்களைக் கொடுக்க வேண்டும் என தங்கள் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டிப் பல தொழில் நிறுவனங்களை வேலை செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன.
அதையடுத்து சென்னைப் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்குச் சிறப்பு அலுவலராக என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட்டும் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை
இதனைத்தொடர்ந்து அவரது தலைமையில் காவல் துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்குச் சிறப்புத் தனிப்படைகளை அமைத்து, தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
அந்த வகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியப் பகுதிகளில் ரவுடிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து வேலையில் ஈடுபடும் பிரபல ரவுடியாக இருந்து வரும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் பகுதியைச்சேர்ந்த படப்பை குணா (42) என்பவரைக் கைது செய்வதற்கு காவல் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி எனக் கொடிகட்டிப் பறக்கும் பிரபல ரவுடி ஆவார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் பிரபல ரவுடி படப்பை குணாவின் ஆதரவாளர்களை ஒடுக்குவதிலும் அவர்களைக் கைது செய்வதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர்.
முன்ஜாமீனில் வந்த குணா தலைமறைவு