காஞ்சிபுரம் மாவட்டத்தில் 510 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 3,180 கோவாக்சின் தடுப்பூசிகள் என 3,690 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நான்கு அரசு மருத்துவமனைகள், 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 32 இடங்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணியானது தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி முகாம் நடைபெறாத காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று இரண்டாம் நாளாக கரோனா தடுப்பூசி போடுவதால் ஏராளமான பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
தடுப்பூசிக்காக குவிந்த மக்கள்: அரசு மருத்துவமனையில் தொற்று பரவும் இடர் - kancheepuram gh
காஞ்சிபுரம்: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று இரண்டாவது நாளாக தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்த கூட்டத்தால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் இடர் ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்த மக்கள்
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.