காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தில் தனியார் பள்ளி சார்பாக மாணவ - மாணவிகள் பனை மரங்களின் விதைகளை நடும் விழா நடைபெற்றது. இதில் தனியார் பள்ளி, செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் மாணவ மாணவிகள் என சுமார் 150 பேர் பங்கேற்றனர். இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏரி, குளம், இதர நிலங்களில் பள்ளி முதல்வர், செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மரம் நடும் விழாவை நடத்தினர். இதில் சுமார் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.
ஆயிரம் பனை விதைகள் நட்ட அக்கறை மாணவர்கள்! - tree
காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றத்தில் தனியார் பள்ளி சார்பாக மாணவ-மாணவிகள் பனை விதை நடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/06-September-2019/4356913_687_4356913_1567767021638.png
பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாணவிகள்,'இத்தகைய செயலில் ஈடுபடுவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், நிலத்தின் வளங்களை அதிகரிப்பதற்கு பனைமரம் அதிகமாக பயன்படுவதாகவும், இதுபோன்று விதைகள் இன்னும் அதிகப்படியான இடங்களில் நடப்போவதாகவும்' தெரிவித்தனர்.