காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியை அடுத்த காந்தூர் கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பூபாலன் (53). இவரும் அதே கிராமத்தில் பள்ளிக்கூட தெருவில் வசித்துவரும் ரமேஷ் (32) என்பவரும், அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது ரமேஷ், பூபாலனிடம் இருக்கும் மதுவை கேட்டுள்ளார். ஆனால், பூபாலன் அதனை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் மதுபோதையில் அருகிலிருந்த கல்லை எடுத்து பூபாலன் தலையில் அடித்துள்ளார். இதனால் பூபாலன் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்தவுடன் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த ரமேஷ் ஓடிவிட்டார். இதன் பின்னர் பூபாலன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், பூபாலன் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பூபாலனின் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாவுக்காகஅனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்துவந்த சுங்குவார்சத்திரம் காவல் துறையினர், ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க... மதுபோதையில் தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் கைது!