தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் அலுவலர்கள் குடிநீர் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

காஞ்சிபுரம்: வாக்கு எண்ணும் மையத்திற்கு அரசு அலுவலர்கள் குடிநீர் எடுத்துச் செல்ல அனுமதிக்காததால் காவல் துறையினரிடம் அலுவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை
வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை

By

Published : May 2, 2021, 11:11 AM IST

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வாக்கும் எண்ணும் பணியானது இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துவருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் தனி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்றுவருகிது.

இந்த வாக்கு எண்ணும் பணியில் 760 அரசு அலுவவர்கள், 900 காவல் துறையினர், 150 துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர்.

அதனையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியவுள்ள அரசு அலுவலர்களுக்கு என தனியாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலர்களும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தி உள்ளே அனுமதித்துவருகின்றனர்.

குறிப்பாக அரசு அலுவலர்கள் செல்போன் மற்றும் எந்தவித தொழில்நுட்ப கருவிகளை எடுத்துச் செல்ல அவர்களுக்கு அனுமதியில்லை. மேலும் அரசு அலுவலர்கள் குடிநீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை என காவல் துறையினர் அறிவுறுத்தியதால், சில அலுவலர்கள் கரோனா காலம் என்பதால் குடிப்பதற்கு வெந்நீர் எடுத்து செல்கிறோம் என கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சில அலுவலர்கள் குடிநீர் எடுத்து செல்ல அனுமதியில்லை என எவ்வித முன் அறிவிப்பும் தங்களுக்கு கூற வில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் காவல்துறையினர் அரசுஅலுவலர்கள் குடிநீர் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

அதனையொட்டி வாக்கு எண்ணும் பணிக்கு வந்த அரசு அலுவலர்கள் குடிநீர் எடுத்து செல்ல காவல்துறையினர் அனுமதிக்கதாதால் சில அலுவலர்கள், கரோனா காலம் என்பதால் குடிப்பதற்கு வெந்நீர் எடுத்து செல்கிறோம் என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு பின்னடைவு

ABOUT THE AUTHOR

...view details