தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் பலியான சோகம்! - kanchipuram latest news

சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூன்.20) ஏற்பட்ட சாலை விபத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, திருமணமாகி ஆறு மாதங்களே ஆன புதுமாப்பிளை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

By

Published : Jun 20, 2021, 1:01 PM IST

காஞ்சிபுரம்: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் மாலிக் பாஷா கரீம் (33). இவருக்கும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த ரம்ஜான் என்ற பெண்ணிற்கும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் கடந்த ஆறு மாத காலமாக மாலிக் பாஷா கரீம், தனது மாமியார் வீட்டில் தங்கி கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாலிக் பாஷா கரீம் இன்று (ஜூன். 20) காலை இருசக்கர வாகனத்தில் வந்தவாசி சென்றுவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது சென்னை முதல் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் ஜங்ஷன் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மாலிக் பாஷா கரீமின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாலிக் பாஷா கரீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சுங்குவார்சத்திரம் காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 13 பேர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details