காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகல் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவருக்கும் எழுச்சூர் பகுதியை சேர்ந்த சூர்யா (23) என்பவருக்கும் கடந்த 11 மாதங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வடகல் பகுதியிலுள்ள பிரபாகரன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் மனமுடைந்த சூர்யா கடந்த ஏழாம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த சூர்யாவின் உறவினர்கள் தண்டலம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சூர்யா நேற்று (பிப்.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.