தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை காஞ்சி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு காணிக்கையாக வழங்கிய முருக பக்தர் - குடியிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை காஞ்சி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு காணிக்கையாக வழங்கிய முருக பக்தர்

காஞ்சிபுரம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள இரண்டடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டடத்தினை காணிக்கையாக 85 வயதுடைய முருக பக்தர் வேலாயுதம் என்பவர், இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

By

Published : Dec 30, 2021, 10:07 PM IST

காஞ்சிபுரம்முனுசாமி முதலியார் அவின்யூவில் வசித்து வருபவர் மு.வேலாயுதம்(85). இவர் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி பின் ஓய்வு பெற்றவர்.

தீவிர முருக பக்தரான இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூவருமே அரசுத்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

மேலும், இவருக்குச் சொந்தமாக ரூ.2 கோடி மதிப்பில் முனுசாமி முதலியார் அவின்யூவில் 2,860 சதுர அடி பரப்பளவு கொண்ட 2 அடுக்கு மாடிக் குடியிருப்புக்குரிய சுய சம்பாத்திய கட்டடம் ஒன்று உள்ளது.

இந்நிலையில், இந்த இடத்தை தனது குலதெய்வமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதற்காகப் பத்திரப்பதிவு செய்து, அதனை இன்று (டிச.30) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

மேலும், இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் பொன்.ஜெயராமன், கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சமநிலை தவறும் கோபம் எப்படியிருக்கும்?; எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் 'வலிமை'!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details