காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் இயங்கிவரும், பச்சையப்பாஸ் ஜவுளி நிறுவனம் மற்றும் செங்கல்வராயன் ஜவுளி நிறுவனத்திற்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
இன்று காலை எட்டு மணி முதல் இந்தச் சோதனையானது நடைபெற்றுவருகிறது. சோதனைக்குச் சென்றபோது, கடையில் இருந்த பொதுமக்கள், நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது நிறுவனத்தின் ஷட்டரைப் பூட்டி சோதனை நடைபெற்றுவருகிறது.
மேலும், தனியார் நிதி நிறுவனம் ஒன்றிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது. மேற்கொண்ட நிறுவனங்களில் உரிமையாளர்கள் வீட்டிலும் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடைபெற்றுவருகிறது.