தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும், “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை கிராம சபைகளில் இயற்றிட வேண்டும் என திமுக நிர்வாகிகளிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் தொடக்கமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட குண்ணம் கிராமத்தில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நாளை (டிச.23) காலை நடைபெறவிருக்கிறது.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளார்.