தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் திட்டியதால் மாடியிலிருந்து விழுந்து மாணவி தற்கொலை? - மருத்துவ மாணவி தற்கொலை

தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்ததற்காக திட்டிய ஆசிரியரால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை
தற்கொலை

By

Published : Jul 24, 2021, 6:03 AM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 24) காலை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில், முதலாமாண்டு சுகாதார அறிவியல் மருத்துவ மாணவியான அம்பத்தூர், புதூர் பகுதியை சேர்ந்த சோனாலி (20). தேர்வறையில் செல்போன் பயன்படுத்தியதாகவும், அப்போது அங்குவந்த தேர்வு கண்காணிப்பாளர் அவரின் செல்போனை பிடுங்கி கொண்டு திட்டினார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர், ஏழாவது மாடியிலிருந்து கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு, மூன்றாவது மாடிக்கு வந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் தலை, உடல்களில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், தற்கொலை செய்துகொண்ட மாணவி சோனாலியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து: மூவர் மரணம், எழுவர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details