தமிழ் மாதங்களில் 12 மாதங்களும் ஒவ்வொரு சிறப்புகளைப் பெற்றுள்ளன. அந்தவகையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் 'நான் மார்கழி மாதமாக இருக்கிறேன்' எனப் பகவத்கீதையில் அருளியுள்ளார். அதனால் 12 மாதங்களிலேயே புனித மாதமாகக் கருதப்படும் மார்கழி மாதம் இன்று (டிச. 16) பிறந்துள்ளது.
மார்கழி மாதத்தை வரவேற்கும்விதமாக காஞ்சிபுரத்தில் அதிகாலையிலேயே எழுந்த பெண்கள் பழமையை மறக்காமல் தங்கள் வீட்டு வாசல்களில் தண்ணீர் தெளித்து, வண்ண கோலமிட்டு, பூசணிப்பூ வைத்து வாசல்கள்தோறும் விளக்கேற்றி வைத்தனர்.