தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தம்பிக்கு வீசிய வலையில் சிக்கிய அண்ணன்... ஓட ஓட விரட்டி படுகொலை - படுகொலை

காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக பகையாளியின் குடும்பத்தை வெறித்தனமாக தாக்கி, ஒருவரை கொலை செய்த அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கொலை வழக்கு  murder  kancheepuram latest news  kancheepuram news  murder case  man killed for antagonism in kancheepuram  kancheepurm man murdered case  kancheepurm man murdered issue  காஞ்சிபுரம் கொலை வழக்கு  அடையாளம் தெரியாத கும்பள் வெட்டிக் கொலை  காஞ்சிபுரம் கொலை வழக்கு  குற்றச் செய்திகள்  கொலை  படுகொலை
படுகொலை

By

Published : Jul 25, 2021, 2:56 PM IST

காஞ்சிபுரம்: பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனரான செந்தில். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர் உள்ளனர். இதில் செந்திலின் தம்பியான ரகு மீது 2 கொலை வழக்குகள் உள்ளன.

ரகு கடந்த 2013ஆம் ஆண்டு பிரபல ரவுடிகளான தினேஷ், தியாகுவின் கூட்டாளியான பிரபாகரின் அண்ணனை வெட்டி படுகொலை செய்தார். அதனைத் தொடர்ந்து பிரபாகரன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ரகுவின் அண்ணனும் தேமுதிகவின் பேச்சாளருமான சரவணன் என்பவரை வெட்டி படுகொலை செய்தனர்.

தாக்கிய கும்பல்

இந்த வழக்கில் குற்றவாளி அனைவரும் கைது செய்யபப்பட்டு, சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மரணமடைந்த செந்திலின் தந்தை நடராஜனின் 13ஆம் நாள் காரியத்திற்காக, நேற்று (ஜூலை 24) இரவு குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது பத்துக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் செந்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியை கொண்டு அங்கு அமர்ந்து இருந்த அனைவரையும் சாரமாரியாக தாக்கியுள்ளனர். குறிப்பாக ரகுவை குறிவைத்து தாக்க தொடங்கியபோது, சுவர் ஏறி குதித்து ரகு தப்பி ஓடிவிட்டார்.

முன்விரோதம் காரணமாக கொலை

மாட்டிய அண்ணன்

அலறல் சத்தம் கேட்டு இதை தடுக்க ஓடி வந்த ரகுவின் அண்ணன் செந்தில், அக்கும்பலிடம் மாட்டிக்கொண்டார். செந்திலை வளைத்த அந்தக் கும்பல் சுமார் 100 மீட்டர் தூரம் சாலையிலேயே ஓட ஓட துரத்தி தாக்கியுள்ளனர். தனது உயிரைக் காப்பாற்றி கொள்ள தலைதெறிக்க ஓடிய செந்தில் அங்கிருந்த ஒரு முட்டு சந்தில் வசமாக மாட்டி கொண்டார்.

கஞ்சா போதையுடன் வெறிதனமாக பின்தொடர்ந்து ஒடி வந்த மர்ம கும்பல், செந்திலை கண்டம் துண்டமாக வெட்டியதுமில்லாமல், அங்கிருந்த பாறாங்கல் மற்றும் உருட்டுக் கட்டையால் செந்திலை சாகும்வரை அடித்துக்கொன்று, பின் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து தாக்கப்பட்ட செந்திலின் சகோதரிகள், மனைவி மற்றும் மருமகன் என நான்கு பேரை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணை

இச்சம்பவம் குறித்து சிவகாஞ்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக ஐந்து நபர்களை பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஒடிய கொலையாளிகளை பிடிக்க காவல் துறை சார்பில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்- குடிபோதை காரணமா?

ABOUT THE AUTHOR

...view details