காஞ்சிபுரம்:மகாளய அமாவாசையை முன்னிட்டு காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருவினில் அமர்ந்தவள் கோயில், அருள்மிகு ஸ்ரீ ராமர் பஜனை கோயிலில் இருந்து ஆண்டு தோறும் 108 பால்குடங்கள்கொண்டு அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும்.
மகாளய அமாவாசை: அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் - 108 பால்குட அபிஷேகம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 11ஆம் ஆண்டாக 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.
Mahalaya Amavasaya celebration at kanchee Angala Parameswari temple
அந்தவகையில் இன்று (மார்ச்.13) மகாளய அமாவாசையை முன்னிட்டு பகவான் பாண்டுரங்கம் குரூப் தலைமையில் ஏராளமான பக்தர்கள் 108 பால்குடங்களைத் தலையில் ஏந்தி, காஞ்சிபுரத்தின் நான்கு ராஜ வீதி வழியாக பெரிய காஞ்சிபுரம், ஜவஹர்லால் நேரு மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.