தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கவுள்ளதால் ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகேவுள்ள வேகவதி ஆற்றின் பகுதியில் மழைக்காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் ராட்சத இயந்திரம் மூலம் வேகவதி ஆற்றிலுள்ள மரங்கள், குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தொடக்கம்! - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன.
Lakes are cleaned in kancheepuram
இந்த தூர்வாரும் பணியானது, காஞ்சிபுரம் முதல் திருப்பருத்திக்குன்றம் வரை முழுமையாக தூர்வாரப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.