தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ!

காஞ்சிபுரம் நண்பர்கள் குழு சார்பில், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 200 பேருக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ
நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ

By

Published : May 21, 2021, 1:11 PM IST

காங்சிபுரம்:வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு காஞ்சிபுரம் நண்பர்கள் குழு சார்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் உள்ள லயன்ஸ் கிளப் ஆப் காஞ்சிபுரம் பல்லவன் சிட்டி கட்டட வளாகத்தில், காஞ்சிபுரம் நண்பர்கள் குழு சார்பில், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 200 பேருக்கு, தலா 1,100 ரூபாய் மதிப்பிலான அரிசி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய கரோனா நிவாரணப் பொருட்கள் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி லயன்ஸ் ராம் பிரசாத் தலைமையில் நேற்று(மே.20) நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றியப் பின்னர், கரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கௌரி தர்மா உரிமையாளர் சுசில், வாலாஜாபாத் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'ரெம்டெசிவிர் விரைவில் கைவிடப்படலாம்' டாக்டர் டி.எஸ்.ராணா!

ABOUT THE AUTHOR

...view details