தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் சூடுபிடித்த தேர்தல்களம் - வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

kanchipuram-local-body-election-dmk-campaign-started
திமுக வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

By

Published : Sep 27, 2021, 9:45 AM IST

காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடந்து முடிந்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் தாமல் பகுதியில் உள்ள அண்ணா திருவுருச் சிலைக்கு திமுக காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.வி. எழிலரசன், திமுக வேட்பாளர்கள் இன்று மலர் மாலை அணிவித்தனர்.

வாக்கு சேகரிப்பு

இதன்தொடர்ச்சியாக திறந்தவெளி வாகனத்தில் சென்றும், கடை வீதிகளிலும் நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு 1ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நித்யாசுகுமார், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய 9ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மலர்கொடிகுமார், திருப்புட்குழு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மனோராஞ்சினி உட்பட பத்து வேட்பாளர்கள் பாலுசெட்டி பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.மேலும், அப்பகுதியில் திமுக தேர்தல் அலுவலகமும் திறக்கப்பட்டது.

இதையும் படிங்க:திட்டமிட்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details