தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் திடீர் ஆய்வு! - Kanchipuram election officer

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (தனி), திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், மாவட்டத் தேர்தல் அலுவலர் பொன்னையா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர்

By

Published : Apr 30, 2019, 9:59 AM IST

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு உறுதி சீட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவை காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள ஆறு அறைகளில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது.

இந்தக் கல்லூரி வளாகத்தில் துணை ராணுவப் படையினர், தமிழ்நாடு காவல் துறையினர் என மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் அலுவலரான பொன்னையா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர்

அவர், வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு அறை, பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களின் வருகைப் பதிவேடு,வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்ட அறைகள் உள்ளிட்டவைகளை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details